மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 மாதங்களாக 12 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்.. தாயின் இரண்டாவது கணவரால் ஏற்பட்ட பரிதாப நிலை.!
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாயின் இரண்டாவது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள பொன்னை அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில் 31 வயதுடைய ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ராயப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில், தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் திருமணமான ஒரு ஆண்டிலேயே பிரிந்துவிட்டனர். அத்துடன் அந்தப் பெண் ராணிப்பேட்ட சிப்காட் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற மற்றொருவரை 2011ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் பெண்ணின் மகளான 12 வயது சிறுமியை கடந்த ஆறு மாதங்களாக இரண்டாவது கணவரான கார்த்திக் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும், இதனை வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி 'வெளியில் கூறினால் கொன்று விடுவாரோ' என எண்ணி மனவேதனையில் புழுங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 29ஆம் தேதி சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்ததையடுத்து மிகுந்த மனவேதனையடைந்த சிறுமி, 'இனியும் இதை கூறாமல் இருந்தால் தன் வாழ்க்கை முடிந்துவிடும்' என எண்ணி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், பொன்னை காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைக் கூறி புகார் அளித்துள்ளார்.
தாய் அளித்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் மனோன்மணி பெண்ணின் இரண்டாவது கணவரான கார்த்திகை போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தார். பின் அவரை நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.