அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.!



Minister Duraimurugan Admit hospital for Ill 

 

திமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் திடீர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

ஒரு வாரமாகவே அமைச்சர் துரைமுருகனுக்கு சளித்தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவில் திடீரென துரைமுருகனுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு அமைச்சர் துரைமுருகனுக்கு நடந்த சோதனையில் லேசான காய்ச்சலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. இன்று மாலை அல்லது நாளை அமைச்சர் வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.