"குறை உள்ளவர்கள் குறையாகத்தான் இருப்பார்கள்" - முக்கிய விவகாரத்தை மேற்கோளிட்டு அமைச்சர் ஏ.வ வேலு பரபரப்பு பேச்சு..!



Minister EV Velu Speech

 

திமுக அரியணையேற்ற 4ம் நாளில் நடந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. நமது முதல்வர் அனைவருக்குமானவர் என அமைச்சர் ஏ.வ. வேலு பேசினார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக அமைச்சர் ஏ.வ வேலு, "ஆட்சிக்கு வந்த 4ம் நாளில் ஆர்வக்கோளாறு திமுக தொண்டர் ஒருவர் அம்மா உணவகத்தின் போஸ்டரை சேதப்படுத்தினர். அதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. 

உடனடியாக நமது முதல்வர், தலைவர் மு.க ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். போஸ்டரை புதிதாக வைத்தார். கட்சிக்காரரின் மீது நடவடிக்கை எடுத்தார். அவர் அம்மா உணவக திட்டத்தை நிறுத்துவரா?. உயர்ந்த எண்ணம் கொண்டவர் அவர். அனைவரையும் சமமாக பார்க்கிறார். 

Minister EV Velu

மதிய உணவு திட்டத்திற்கு முன்னோடியாக காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆகியோர் முன்னோடியாக இருந்தார்கள். இன்று முதல்வரும் அப்படியே இருக்கிறார். அதனாலேயே காலை உணவு திட்டம் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. தாயுள்ளத்தோடு அத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிராளிகள் எங்களின் திட்டத்தை பாராட்டவேண்டாம். குறை கூறாமலாவது இருக்கலாம். அதிலும் குறை காணுகிறார்கள். குறை உள்ளவர்கள் குறையாகத்தான் இருப்பார்கள். அவர்களை கண்டுகொள்ளவேண்டாம். திராவிட மாடல் ஆட்சிக்கு நாம் உற்ற துணையோடு இருக்க வேண்டும்" என்று பேசினார்.