#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"என் மகள இப்படி பண்ணிடீங்களே" 14 வயது சிறுமி கூட்டு கற்பழிப்பு.!! கதறிய தந்தை.!!
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றிருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த 3 இளைஞர்கள் சிறுமியை தூக்கிச் சென்று தொடர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கதறிய தந்தை
இந்நிலையில் மகள் வெளியே சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தந்தை மகளைத் தேடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்திருக்கிறார். அப்போது மகளின் முனகல் சத்தம் கேட்கவே பதறி துடித்த தந்தை அந்த இடத்தை நோக்கி சென்றுள்ளார். இதனை அறிந்த நபர்கள் சிறுமியை விட்டுவிட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் மகளின் நிலைமையை கண்ட தந்தை கதறி துடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "ஒரே தொந்தரவு முடிச்சி விட்டுருவோம்.." கள்ள காதலனுடன் தாய் போட்ட பக்கா ஸ்கெட்ச்.!! மனைவி உடந்தை.!!
போக்சோ சட்டத்தில் கைது
ஆரம்பத்தில் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து வெளியே கூறாத தந்தை பின்னர் காவல் துறையிடம் புகார் அளிக்க சென்றிருக்கிறார். அப்போது அவரது புகாரை பெறாமல் காவல்துறையினர் இழுத்தடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார். இதனையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் மகளிர் காவல் நிலையத்தை நாடினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளான வீரப்பன்(28), இளமதன்(28) மற்றும் சின்னராசு(30) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்ததால் கொடூரம்; இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல்., பதறவைக்கும் காட்சி.!