ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
யாருடன் கூட்டணி.? ஓப்பனாக பேசிய மு.க.அழகிரி.! சூடுபிடிக்கும் அரசியல் களம்.! அதிர்ச்சியில் திமுக.!
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதால், அவர், தி.மு.க., வில் சேர்க்கப்படுவாரா அல்லது புதுக்கட்சி துவக்கி, நடிகர் ரஜினியுடன் கூட்டணி அமைப்பாரா என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும், மு.க.அழகிரி பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், மு.க.அழகிரி சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து அவரது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, எனது எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஜனவரி 3ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளேன். அங்கு எனது ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். ரஜினிகாந்த் சென்னை வந்தவுடன் அவரை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன். வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த அவர், திமுகவில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. வரும் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.