ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ரஜினிக்காக களமிறங்கிய மு.க.அழகிரி! அதிரடியாக மு.க.அழகிரி போட்ட ட்விட்!
ரஜினிகாந்திடம் நஷ்டஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது என்று மு.க.அழகிரி போட்டுள்ள டுவீட் வைரலாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆ ம் தேதி திரைக்கு வந்தது தர்பார் திரைப்படம். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தை 65 கோடி ரூபாய்க்கு வாங்கி, நஷ்டமடைந்ததாகவும், இதனால் ரஜினிகாந்த் இழப்பீடு வழங்க வேண்டும் என வினியோகஸ்தர்கள் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.
#நஷ்டஈடு கேட்பவர்களை
— M.K.Alagiri (@mkAlagiri_) January 31, 2020
ஆபிஸ் ரூம் அன்புடன் வரவேற்கிறது!#DarbarWWBlockbuster
🙏🙏🙏🙏🙏
இந்நிலையில், இது குறித்து மு.க. அழகிரி அவரது ட்விட்டர் பக்கத்ததில் "நஷ்ட ஈடு கேட்பவர்கள், ஆபிஸ் ரூமிற்கு வரவும்" என கூறியுள்ளார். ஆனால் இது அழகிரியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமா என்பது தெரியவில்லை.
நண்பர் #ரஜினி க்கு
— M.K.Alagiri (@mkAlagiri_) January 31, 2020
கொலைமிரட்டல் விடுத்த#திக பிரமுகர்களை
வன்மையாக கண்டிக்கிறேன்!
.
இது போன்ற மிரட்டல்களை
இனி 'மன்னிக்க' முடியாது
ஆனால் ரஜினியின் நெருஙகிய நண்பரான மு.க. அழகிரி பெயரில் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு முன்புக்கு "நண்பர் #ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுத்த #திக பிரமுகர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! இது போன்ற மிரட்டல்களை இனி ‘மன்னிக்க’ முடியாது" என்று பதிவிட்டிருப்பது குறிபிடித்தக்கது.