மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புகைப்படம் எடுத்த பக்தர்., செல்போனை பிடுங்கி சென்ற வானரம்! பழனியில் கலகல சம்பவம்!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகர் கோவிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து முருகரை வழிபட்டு சென்றனர்.
இந்த நிலையில் பக்தர் ஒருவர் கோவிலில் சுற்றி திரிந்த குரங்குகளை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்பொழுது திடீரென இறங்கி வந்த குரங்கு ஒன்று, பக்தரின் செல்போனை பிடுங்கி சென்று ஓடியது.
இதனால் அவரால் செல்போனை திரும்பவும் பெற முடியவில்லை. இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் எப்படியாவது எனது செல்போனை மீட்டுத் தாருங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் அவர்களது பொருட்களை அவர்கள் தான் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நான் எப்படி குரங்கிடம் சென்று மீட்டு தருவேன் என்று பதில் அளித்துள்ளனர். இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.