மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் இறந்த துயரம் தாங்காமல் 18 வயது மகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்-லலிதா தம்பதியினர். லலிதா அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 18 வயதில் தர்ஷினி என்ற மகள் உள்ளார். தர்ஷினி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உயிரிழந்துள்ளார். பாலமுருகனின் இறப்பிலிருந்து மீள முடியாமல் இருந்துள்ளனர் லலிதா மற்றும் தர்ஷினி.
இந்நிலையில் திடீரென லலிதா மற்றும் தர்ஷினி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்த உறவினர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.