மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்... காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் உண்மை.!
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறத்தியில் ஒன்பது நாட்களே ஆன குழந்தையை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டுள்ள அந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் உள்ள பூனாட்சி நத்தமேடை சேர்ந்தவர் சகுந்தலா தேவி இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இரண்டாவதாக கர்ப்பமடைந்த இவருக்கு ஏப்ரல் 18ஆம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்து ஒன்பது நாட்கள் ஆன நிலையில் வெளியில் வேலை செய்துவிட்டு வந்து குழந்தையை பார்த்தபோது அசைவற்ற நிலையில் இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனாலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் தற்போது உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில் குழந்தையின் தலையில் காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த காவல்துறையினர் குழந்தையின் தாய் சகுந்தலாதேவி இடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியடைந்து குழந்தையின் மூச்சை பிடித்து கொலை செய்ததாக காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பெற்ற தாயை பிஞ்சு குழந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.