மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெயில் தாங்கமுடியாமல் குழந்தைகளுடன் குளிர்பானம் அருந்திய தாய்! குளிர்பானத்தால் நேர்ந்த கொடூரம்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயியான இவருக்கு முத்துலட்சுமிஎன்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாரிமுத்து வெளியில் சென்ற நிலையில், முத்துலட்சுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி வந்துள்ளார்.
வெயில் தாங்கமுடியாமல் குளிர்பானத்தை அருந்திய முத்துலட்சுமி தனது இரண்டு மகள்களுக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். குளிர்பானம் அருந்திய சிறிது நேரத்தில் முத்துலட்சுமிக்கும், அவரது மகள்களுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாரிமுத்து குளிர்பான பாட்டிலை பார்த்த போது அதில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது.
பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை அருந்தியதாலேயே அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.