இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் கூறிய அதிர்ச்சி காரணம்!



mother-said-reason-for-killed-her-child

சென்னை மதுரவாயல் பகுதியில் வசித்து வந்தவர் சிபிராஜ். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், சினிமாத்துறை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி கொடுத்து அதில் கமிஷன் பெறும் தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய 2-வது மனைவி சைலஜாவிற்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர்.


இந்தநிலையில் சைலஜாவின் கணவர் சிபிராஜ் கடந்த பிப்ரவரி மாதம் கல்லீரல் நோயால் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் சைலஜாவின் உறவினரான கேரளா மாநிலத்தை சேர்ந்த தினத் என்பவர் புதன்கிழமையன்று, சென்னைக்கு வந்து சைலஜாவின் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார்.

Murder
அப்போது சைலஜா மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் மயங்கிய நிலையில் தரையில் கிடந்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட போது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

உயிருக்கு போராடி கொண்டிருந்த சைலஜாவிற்கு சிகிச்சை மேற்கொண்டனர். இந்த நிலையில் சைலஜா அன்று நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார். நானும் என்னுடைய கணவர் சிபிராஜூம் காதலித்து திருமணம் செய்துகொண்டோம்.

Murder

அந்த சமயத்தில் அவர் முதல் மனைவியுடன் பேசுவதை நிறுத்தியதாக என்னிடம் கூறியிருந்தார். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவரை பார்த்தபோது கணவருக்கு கல்லீரல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் அந்த சமயத்தில் கணவர் பற்றி பல அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிந்துகொண்டேன். அவர் முதல் மனைவியுடன் தொடர்ந்து போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது என்பதும் தெரியவந்தது. எனது கணவர் இறந்த பிறகு கடன் வாங்கியவர்கள் என்னிடம் கேட்டு வந்தார்கள். நானும் கார், வீட்டிலிருந்த நகைகள் என அனைத்தையும் விற்று கடனை கட்டினேன். ஆனால் முழு கடன்களையும் என்னால் கட்டமுடியவில்லை. 

Murder

இதனையடுத்து கேரளாவில் இருக்கும் சிபிராஜின் முதல் மனைவிக்கு நானும் குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தவறான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். உன்னையும் குழந்தைகளையும் நான் காப்பாற்றுகிறேன் கேரளவிற்கு உடனே புறப்பட்டு வருமாறு கூறினார்.

ஆனால் அவருக்கு சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை. குழந்தைகளுக்கு அதிக அளவு மருந்தை கொடுத்துவிட்டு நானும்  தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன். என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சைலஜா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். சிகிச்சை முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர்.