மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உஷார்.. பெண்களை குறிவைத்து ஆபாச போட்டோ எடுக்கும் மர்மகும்பல்; ஆன்லைனில் ஒரு போட்டோ ரூ.50-க்கு விற்பனை.!!
நடிகைகளின் பல மாப்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் பரவிகிடக்கும். இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும் அவை அசுர வளர்ச்சியாக வளர்ந்து வருகின்றன. தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பணத்தை நூதனமாக பறிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் பெண்களை குறிவைத்து பணம் சம்பாதிக்க எண்ணி, அவர்களை புகைப்படம் எடுத்து பின்னர் விபரங்களை கண்டறிந்து மிரட்டுவதும் நடந்து வருகிறது. இந்த குற்றச்செயலை செய்யும் மர்மநபர்கள் பெண்களை மறைந்திருந்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை பரப்பியது தெரியவந்துள்ளது.
கடைவீதி, ரயில் நிலையங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லும் பெண்களை குறிவைத்து அவர்களுக்கே தெரியாமல் ஆடை விலகும் நேரத்தில் ஆபாசமாக படம் எடுத்து டெலிகிராம், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவு செய்து பணம் பறித்துள்ளனர்.
மேலும் இந்த குழுக்களில் சேர விரும்புபவர்களை வைத்தும் பணம் பறித்த நிலையில், ஒரு போட்டோவிற்கு குறைந்தபட்சம் ரூ.50 என்ற அடிப்படையிலும் 20 போட்டோக்கள், 50 போட்டோக்கள் என்று போடும்போது அதற்கேற்றார் போல பணமும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. போட்டோக்களில் இருக்கும் பெண்களுக்கும், உறவினர்களுக்கும் இது குறித்த புகைப்படங்கள் ஆபாசமாகவும் பகிரப்பட்டு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான புகார்கள் சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் .மேலும் பொதுவெளியில் செல்லும் பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துவருகின்றனர்.