அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
காசி விவகாரத்தில் அடுத்த சிக்கல்..! பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிய காசி..! வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் தீவிரம்..!
கடந்த சில நாட்களாக தமிழிகத்தில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஓன்று நாகர்கோவில் காசி விவகாரம். 70 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களை வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்த நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற சுஜியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்நிலையில், பொது இடத்தை ஆக்கிரமித்து காசியின் வீடு கட்டப்பட்டிருப்பதாகவும், வீட்டை ஜப்தி செய்ய இருப்பதுவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
காசியின் வீடு சாலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து காசியின் தந்தை தங்கபாண்டியன் பெயரில் இருக்கும் வீட்டை அதிகாரிகள் அளவீடு செய்துள்ளன்னர். பொது இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டிருப்பதும், வீடு கட்ட பெறப்பட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமான பணிகள் நடந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து காசியின் தந்தையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வீட்டை ஜப்தி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.