மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலில் மகள்கள்..! பிறகு மகள்களின் அந்தரங்க வீடியோவை காட்டி அவர்களின் அம்மாக்கள்..! நாகர்கோயில் காசி வழக்கில் அடுத்தடுத்து புது திருப்பம்.!
பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞரை குமரி மாவட்ட போலீசார் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்லூரி பெண்கள், பள்ளி மாணவிகள், திருமணம் முடிந்த பெண்கள் என 70 கும் மேற்ப்பட்ட பெண்களுடன் நெருக்கமாக பழகி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோ, புகைப்படங்களை வைத்து மிரட்டி, அவர்களிடம் பணம் பறித்துவந்தான் காசி. சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் அவனை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், காசியின் தனிப்பட்ட லாப்டாப்பை சோதனை செய்ததில் அதில் பல முக்கிய தகவல்கள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மகளை சீரழித்து அவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவருடைய அம்மாவிடம் காட்டி மிரட்டி அம்மாவையும் தனது வலையில் காசி வீழ்த்தி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதனை அடுத்து காசியிடம் விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.