அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பலபெண்கள்.. காசி வழக்கில் புதிய திருப்பம்.. செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட 800 கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் மீட்பு
800கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை காசியின் செல்போனில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று நாகர்கோவில் காசி வழக்கு. இளம் பெண்கள், திருமணம் முடிந்த பெண்கள் என 100 கும் மேற்பட்ட பெண்களை மயக்கி, ஆபாசப் படங்கள் எடுத்து, மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீசார் காசி என்ற இளைஞரை கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். மேலும் காசியின் வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்துவரும்நிலையில் காசியின் பர்சனல் லாப்டாப் மற்றும் செல்போனை கைப்பற்றி அதில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கு பரபரப்பாக சென்றுகொண்டிருந்தநிலையில் சென்னையை சேர்ந்த இளம் கல்லூரி மாணவி ஒருவர் தானும் காசியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் போலீசார் காசியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவந்தனர்.
இதனிடையே காசியின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட சுமார் 800 கும் மேற்ப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் சைபர்கிரைம் உதவியுடன் மீட்டனர். இதனால் காசியின் வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.