நாகர்கோவில் காசி விவகாரத்தில் அதிரடி திருப்பம்..! என்னையும் ஏமாற்றிவிட்டான்.! மேலும் ஒரு இளம் பெண் புகார்.!
தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விஷயங்களில் ஓன்று நாகர்கோவில் காசி விவகாரம். பள்ளி மாணவிகள் தொடங்கி கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், பெண் மருத்துவர் என சுமார் 70 பெண்களுக்கு மேல் நட்பாக பழகி, அவர்களை ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்துவந்த காசி என்ற சுஜியை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து குமரி போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததோடு, காசியின் பர்சனல் லாப்டாப்பை கைப்பற்றி சோதனை நடத்திவருகின்றனர். இந்த வழக்கியில் அதிரடி திரும்பமாக காசி மீது மேலும் ஒரு இளம் பெண் புகார் கொடுத்துள்ளார்.
காசி கல்லூரியில் படித்தபோது முகநூல் மூலம் ஒரு இளம் பெண்ணை தனது வலையில் வீழ்த்தி அந்த பெண்ணிடம் பலலட்சம் வரை பணம் பறித்துள்ளார். குறிப்பிட்ட பெண் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்ட காசி அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகி பலமுறை தனிமையில் சந்தித்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
பின்னர் பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் 2 லட்சம் 1 லட்சம் என பணம் வாங்கியுள்ளார். தனது தாய்க்கு புற்றுநோய் அவருக்கு மருந்து வாங்க காசு வேண்டும் என பல காரணங்களை காசி கூறியுள்ளார். ஒருகட்டத்தில் தனது கையில் பணம் இல்லாமல், அந்த பெண் தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழட்டி கொடுத்துள்ளார்.
இப்படி அனைத்தையும் பறித்துக்கொண்டு சில நாட்களில் அந்த பெண்ணிற்கு போன் செய்வதை காசி நிறுத்தியுள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரியவர காசியிடம் தனது பணம், நகை ஆகியவற்றை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். பணம், நகையை திருப்பி கேட்டால் வீடியோ, புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என காசி மிரட்டியதால் அந்த பெண் அமைதியாக இருந்துள்ளார்.
தற்போது காசி கைதுசெய்யப்பட்ட விவகாரம் வெளியே வரவே அந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் கூறியுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க 9498111103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குமரி மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பவர்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.