மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ ஒல்லியாக இருக்கிறாய், அழகாக இல்லை என கூறி டார்ச்சர் செய்த கணவர்! திருமணமாகி 7 மாதத்தில் மணப்பெண் எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தின் நாகர்கோவிலை சேர்ந்தவர் பொன்னு முத்து. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், சிறுவயதிலேயே மனைவியை இழந்த இவர் தனது குழந்தைகளை ஒரு நல்ல தாயாகவும், தந்தையாகவும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் பொன்னு முத்து தனது மூன்றாவது மகளான அர்ச்சனாவை(24) அதே பகுதியை சேர்ந்த சிவன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். முதல் இரண்டு மாதங்கள் சந்தோசமாக தான் புதுமணதம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர்.
அதன் பிறகு சிவன் தனது மனைவியிடம் நீ மிகவும் ஒல்லியாக இருக்கிறாய், அழகாக இல்லை என கூறி டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதனை அர்ச்சனா தனது தந்தையிடம் கூறவே அவரும் அர்ச்சனா குண்டாக மருந்துகளை வாங்கி கொடுத்துள்ளார்.
அதனை அடுத்து சிவன் அர்ச்சனாவிடம் நீ சமைப்பது நல்லவே இல்லை என கூறி அவரை அடிக்கடி அடித்து வந்துள்ளார். இதனால் நிம்மதியில்லாமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார் அர்ச்சனா.
இந்நிலையில் திடீரென ஒரு நாள் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அர்ச்சனாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அர்ச்சனாவின் இறப்பு தற்கொலையா இல்லை கொலையா என விசாரித்து வருகின்றனர்.