"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
முட்டை பிரியர்களுக்கு ஷாக் செய்தி.. மேலும் அதிகரித்தது முட்டை விலை; நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு.!
ஒருங்கிணைந்த நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக நாளொன்றுக்கு 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நாமக்கல் முட்டைகள் உலகளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்த முட்டைகளின் விலையை நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது.
இந்நிலையில், நேற்று இக்குழுவின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்ற நிலையில், முட்டை விலையை 5 காசுகள் உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, முட்டையின் விலை 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களில் 30 காசுகள் அளவு முட்டை விலை உயர்ந்துள்ளது. பண்ணை கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.101 ஆகவும், முட்டை கோழியின் விலை ரூ.77 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.