மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேரிடர் எச்சரிக்கை உங்களுக்கும் வந்ததா?.. அரசின் பாதுகாப்பு முயற்சிக்கு நல்ல பலன்., பதறவேண்டாம்.!
மத்திய பேரிடர் மேலாண்மை வாரியம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை ஏற்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப உதவியுடன் இன்று பேரிடர் எச்சரிக்கை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பகல் 11:27 மணியளவில் நடந்த சோதனையில், ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கை ஊடகம் அனுப்பும் நடைமுறை பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சியின் விளைவாக, பலரும் தங்களின் ஸ்மார்ட்போனில் எச்சரிக்கை சமிக்கையை பெற்றனர்.
நிலநடுக்கம், சுனாமி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு உட்பட பல இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களை உடனடியாக எச்சரிக்கும்பொருட்டு நடந்துள்ள சோதனை ஓட்டமானது வெற்றியடைந்துள்ளது.