சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய கும்பல்.! வீடியோவை பார்த்து திகைத்துப்போன போலீசார்.!



nattu-kozhi-theft

சென்னை கொரட்டூரை அடுத்த பாடி வள்ளலார் தெருவில் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் பூபாலன். இவர், தனது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டுக்கோழிகள் திருட்டுபோனதாக கொரட்டூர் கவள்நலயத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அந்த இறைச்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கட்சியில், சொகுசு காரில் வந்த நபர் ஒருவர் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் கூட்டின் பூட்டை உடைத்துவிட்டுஅதில் இருந்த கோழிகளை திருடி காரின் பின்இருக்கையில் போடுகிறார். அவர் செய்யும் செயலுக்கு காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் இளம்பெண்ணும், சிறுவனும் உதவி செய்கிறார்கள். 

இவ்வாறு 3 முறை கோழிகளை திருடும் நபர், பின்னர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிடும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை வைத்து அந்த சொகுசு காரில் வந்து கோழிகளை திருடிய சிறுவன், பெண் உள்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கொரட்டூர் போதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இந்திராணி என்ற பெண்ணின் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த இரண்டு ஆடுகளை ஒரு காரில் வந்த தம்பதிகள் திருடி காரில் ஏற்றி சென்றது சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இந்தநிலையில், அதே கும்பல்தான் இந்த இறைச்சி கடையில் கோழிகளை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.