நாமக்கல் அருகே கண்டெடுக்கப்பட்ட முகம் சிதைந்த சடலம்... கொலைக்கான பின்னணி என்ன.? காவல்துறை தீவிர விசாரணை.!



near-nammakal-a-dead-body-was-found-with-face-distorted

நாமக்கல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலத்தால்  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் கிரீன் கார்டன் அருகே  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்  முகம் சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ஜூன் 16ஆம் தேதி அன்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் காவலர்கள்  சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது 45  வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கைலியும் சட்டையும் அணிந்திருந்தார்.

tamilnadu

அவரது முகம் உருவம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு இருந்தது. மேலும் கூலி வேலைக்காக வந்திருக்கலாம் எனவும்  காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும் அவரது கைப்பையில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம்  விசாரணையை தொடங்கினர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில்  இறந்த நபர் கோவையைச் சார்ந்த கண்ணன் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் அவர் எதற்காக நாமக்கல் வந்தார்  அவரை கொலை செய்தது யார். மேலும் அவரது செல்போனில் இருக்கு யார் யாரெல்லாம் அழைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.