மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கு மரியாதையே தரல..." ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து படுகொலை.... அதிர்ச்சி வாக்குமூலம் !
சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தனக்கு யாரும் மரியாதை கொடுக்காத விரக்தியில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் அந்தக் கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி வேலைநத்தம் கிராமத்தைச் சார்ந்தவர் ஆறுமுகம்(60) இவருக்கே சுசிலா(53) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளுக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. தனக்கு சொந்தமான நிலத்தில் கடன் வாங்கி வீடு கட்டி இருக்கிறார் ஆறுமுகம்.
ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தனக்கு வீட்டில் யாருமே மரியாதை கொடுப்பதில்லை தன்னை நிராகரிப்பதாக கூறி மனைவியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் இருந்த ஆறுமுகம் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட சுசீலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி ஆறுமுகத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு வீட்டில் யாருமே மரியாதை தராததால் விரக்தியில் இருந்ததாக குறிப்பிட்ட அவர் இதைப் பற்றி மனைவியிடம் கேட்டபோது அவர் தன்னை தள்ளி விட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.