மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி அருகே பரபரப்பு... ஆசிரியரை பழி தீர்த்த முன்னாள் வகுப்பு மாணவன் கைது.!
திருச்சி அருகே கல்லூரி மாணவர் பத்தாம் வகுப்பில் அடித்த ஆசிரியரை பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த மாணவர் கைது செய்யப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
திருச்சி காமராஜபுரத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவருக்கு வயது 41. இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று ஊருக்குச் செல்வதற்காக பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே இருக்கும் சினிமா தியேட்டர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 19 வயது வாலிபர் ஒருவர் நான் உங்களிடம் படித்த முன்னாள் மாணவன் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் ஆசிரியர் வாஞ்சிநாதனிடம் என்னை பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏன் அடித்தாய் என்று கூறி அதற்குப் பழிக்கு பலியாக ஆசிரியரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை ஆசிரியரை தாக்கிய அவரது முன்னாள் மாணவரை கைது செய்தது.
காவல்துறையின் விசாரணையில் அந்த மாணவரின் பெயர் ஜேம்ஸ் பாண்டி(19) என்பதும் அவர் பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன் என்பவரது மகன் என்றும் தெரியவந்தது. மேலும் தற்போது பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.