மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதிய உணவு தாமதமானதால் பாட்டி வீட்டிற்கு சென்ற மனைவி... கணவன் செய்த கொடூரம்.!
விருதுநகர் மாவட்டத்தில் மதிய உணவு சமைத்துக் கொண்டு இருக்கும் போதே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கணவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் மேலஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் மதிமன்னன் 28 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அதே பகுதியைச் சார்ந்த பாண்டிச்சேரி என்ற 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பாண்டி செவ்வியும் அங்குள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பாண்டிச்செல்வி உணவு சமைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது வேலைக்கு செல்ல நேரம் ஆகிறது சீக்கிரமாக உணவை கொடு என மதிமன்னன் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது நானும் தான் வேலைக்கு செல்கிறேன் அங்கேயும் வேலை செய்துவிட்டு இங்கு வீட்டிலேயும் வேலை செய்கிறேன் நீ எனக்கு உதவி செய்ய மாட்டேன் என்கிறாய் என கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே அருகில் இருந்த தனது பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கிறார் பாண்டி செல்வி.
தனது பாட்டி வீட்டிற்கு சென்றவர் கதவையும் பூட்டி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் அவரது பாட்டி வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்துச் சென்று தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த மதிமன்னனையும் கைது செய்தனர்.