மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுமாப்பிள்ளை 4 பேர் கும்பலால் வெட்டிக்கொலை.. திருமணமான 15 நாட்களில் சோகம்.! கண்ணீரில் புதுமணப்பெண்.!
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளையை, மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சோகம் நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் பழனிசாமி. இவரது மகன் பிரபாகரன். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், பிரபாகரன் நேற்றிரவு தனது நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஏர்போர்ட் நகர் பகுதியில் சென்றுள்ளார்.
அப்போது அவரை 4 பேர் அடங்கிய மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிய நிலையில், இதனை தடுக்க வந்த அவரது நண்பர்களையும் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் மூவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.