அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை குறித்து வந்த தகவல்.! துடிதுடித்து போன மனைவி.! நெஞ்சை உருக்கும் சம்பவம்.!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் விஜய பிரபாகரன். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பிரபாகரன் தனது பைக்கில் உறவினர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அவர்கள் மைக்கேல்பாளையம் அருகே சென்றப்போது எதிரே வந்த சரக்கு லாரி அவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை விஜய பிரபாகரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த இருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த அமலஜோசப் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் லாரன்ஸ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமாகி 20 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை இறந்த தகவலை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.