புதுப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்... துள்ளத் துடிக்க கொலை செய்த கணவன்... காவல்துறை விசாரணை.!



newly-wedded-bride-brutally-murdered-by-her-husband-sho

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமான இரண்டு மாதங்களில் புது பெண் கழுத்து அறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் அருகே உள்ள கீழ் அனுவம்பட்டு  கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் சீர்காளியை அடுத்துள்ள அரசூரை  சேர்ந்த  ரோஜா(25) என்ற பெண்ணுக்கும்  சிதம்பரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. சிலம்பரசன் திருமணத்திற்கு முன்பு மூன்று ஆண்டுகள் துபாயில் டிரைவராக வேலை செய்திருக்கிறார்.

tamilnadu

திருமணமான புதிதிலேயே கணவன் மற்றும் மனைவயிடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு ரோஜா வீட்டிலிருந்தபோது அவருக்கும் சிலம்பரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் பிளேடை எடுத்து ரோஜாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். இதன் பின்னர் அவர் கிள்ளை காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார். 

tamilnadu

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான காவலர்கள் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம்  தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.  திருமணமான இரண்டு மாதங்களிலேயே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.