மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்க யாரும் வரமாட்டார்கள்... ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பீ டீமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். அவருக்கு ஆதரவாக யாருமே இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதே வேளையில், பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும், கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓ பன்னீர் செல்வம் இன்று அளித்த பேட்டியின் போது கூறினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கருத்து தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், யார் நினைத்தாலும் சின்னத்தை முடக்க முடியாது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து கேலிக்கூத்தாக இருக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளர் தான் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம், திமுகவின் பீ டீமாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக யாருமே இல்லை. அவர் நினைப்பது எதுவும் நடக்காது. மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் எங்களுக்கு தான் இருக்கிறது. மேலும் திமுகவிற்கு ஊது குழலாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் விரக்த்தியின் உச்சத்தில் பேசி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார், அவரிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்சியும் அவருடன் கூட்டணிக்கு வர மாட்டர்கள். அதிமுக சின்னத்தை யார் நினைத்தாலும் முடக்க முடியாது. தற்போது அவர் மனதில் இருப்பது வெளி வந்துள்ளது. அவர் சின்னத்தை முடக்கும் வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறார் என்று கூறினார்.