மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திருமணம் செய்த இளைஞரின் ஆணுறுப்பை நசுக்கி சித்ரவதை; நா.த.க பிரமுகர் உட்பட 6 பேர் அதிர்ச்சி செயல்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி, சொரியம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரின் மகன் சந்தோஷ் குமார் (வயது 20). இவர் அப்பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தாலும், காதலில் உறுதியாக இருந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலை வளர்த்து வந்த ஜோடி, கடந்த 14 ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியது. இருவரும் திருமணம் செய்துகொண்டு மதுரையில் தங்கி இருந்துள்ளளது. இந்த விஷயம் அவர்களின் நண்பர்களால் உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அதிரடி காட்டிய "ஆபரேஷன் அகழி".. கட்டப்பஞ்சாயத்து ரௌடிசத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றும் திருச்சி எஸ்.பி..!
காதல் திருமணம்
இதனையடுத்து, கடந்த 16 ம் தேதி பெண்ணின் உறவினர்களான அருணகிரி, சாமிக்கண்ணு, கார்த்திக், பிரவீன் உட்பட 6 பேர், மதுரையில் உள்ள இலுப்பக்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக திருச்சி அழைத்து வந்துள்ளனர். பின், காரிலேயே தீயில் பழுக்க காய்ச்சிய கம்பியை கொண்டு, சந்தோஷின் ஆணுறுப்பை நசுக்கி இருக்கின்றனர்.
அத்துடன் அவரை விரட்டியடித்தவர்கள், ஆணவக்கொலை செய்திடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். இறுதியாக சந்தோஷிடம் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து இருக்கின்றனர். பின் சந்தோஷின் பெற்றோரை துவரங்குறிச்சி, மோரணி மலைக்கு வரவழைத்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.
அந்தரங்க உறுப்பை சிதைத்து கொடூரம்
ஆணுறுப்பு நசுக்கப்பட்டதில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சந்தோஷ் குமார், மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து வளநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கூறிய 6 பேரையும் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர்.
இவர்களில் கைதான அருணகிரி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆவார். இவர் கடந்த 2016 ம் ஆண்டு மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் நா.த.க வேட்பாளராக களமிறங்கி இருந்தார். சமீபத்தில் வழக்கறிஞராகவும் பதிவுஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சி காவல்துறை அதிரடி... 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.!! 3 இளைஞர்கள் கைது.!!