மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரூ.41 ஆயிரம் கோடி விவகாரத்தை அம்பலப்படுத்துவேன்; ஓ.பி.எஸ் தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்..!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தங்கமணிக்கு எதிராக இருக்கிறார்கள். விரைவில் மிகப்பெரிய ஆதாரம் அம்பலப்படுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பேசினார்.
சென்னையில் உள்ள பசுமைவழிச்சாலையில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தினை கட்சி ரீதியில் 3 மாவட்டமாக பிரிந்து மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ் நியமனம் செய்துள்ளார். கட்சியின் வரலாற்றை அறிந்தவர்கள், தங்கமணியால் ஒடுக்கப்பட்டவர்கள், பல ஆண்டுகளாக பல பொறுப்புகளில் கட்சியில் இருந்தவர்கள் புதிய நிர்வாகிகளை நோக்கி பயணிக்கின்றனர்.
இது முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கவலை, அச்சத்தினை தந்துள்ளது. அதனைப்போல, அவர் பல தவறான தகவலை பேசி வருகிறார். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்திய சமயத்தில் முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி சந்தித்துக்கொண்டன. மீதமுள்ள காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கட்டும், நீங்கள் தான் அடுத்த முதல்வர் என்று கூறினார்கள். ஆட்சியை கவிழ்க்க டிடிவி தீர்மானம் கொண்டு வந்த சமயத்தில், ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான்.
அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றியுடன் இருந்தது இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வதை தான் தன்னுடன் அழைத்து செல்வார். பழனிச்சாமி டெல்லி சென்றபோது ஒருநாளும் ஓ.பி.எஸ்ஸை அழைத்து சென்றது கிடையாது. பிரதமர் இருவரை அழைத்தாலும் தனித்தனியே சென்றுதான் சந்திப்பார்கள். ஓ.பி.எஸ் பல அவமானத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறார்.
கட்சியின் நிலைமை மோசமாகி வருகிறது. விரைவில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேரம் பேசிய தகவல், திமுகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளவர்கள் விரிவான விளக்க விபரம் சில மாதங்களில் அம்பலமாகும். ஓ.பி.எஸ் அனுமதி வழங்கினால் ரூ.41 ஆயிரம் கோடிக்கான ரகசியமும் என்னால் வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.