மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓலா டூவீலர் சவாரி; 22 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்.. அண்ணனுக்கு போன் போட்டு ஆப்படித்த பெண்மணி.!
சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், மயிலாப்பூரில் இருக்கும் தனது அண்ணனின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் பாதுகாப்பாக பயணிக்க ஓலா டூவீலரை புக்கிங் செய்துள்ளார். ரமேஷ் என்பவர் அவருக்கு வாகன ஓட்டியாக வந்துள்ளார்.
இந்நிலையில், வழியிலேயே ரமேஷ் பெண்ணிடம் அத்துமீறவே, அங்கிருந்து அண்ணனுக்கு தகவல் தெரிவித்த பெண்ணின் சகோதரர், அங்கு விரைந்துள்ளார்.
பின் சம்பவம் குறித்து வளசரவாக்கம் ராயலா நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முகப்பேரை சேர்ந்த 24 வயது இளைஞர் ரமேஷை கைது செய்தனர்.
கைதாகிய ரமேஷ் பகலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வரும் நிலையில், இரவு மற்றும் விடுமுறை நாட்களில் வருமானத்திற்காக ஓலா டூவீலர் இயக்கி வந்தது தெரியவந்தது.