மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 வயது சிறுமிக்கு பரோட்டா வாங்கி கொடுத்து முதியவர் செய்த கொடூரம்.! வலியால் துடித்த சிறுமி.! தட்டி தூக்கிய போலீஸ்.!
12 வயது சிறுமிக்குப் பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்த வைத்தியலிங்கம் என்ற முதியவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் வைத்தியலிங்கம் கடந்த வாரம் சிறுமியை வீட்டுக்கு அழைத்து பரோட்டா வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை வெளியே சொன்னால், சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சிறுமி நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது தனக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து முதியவர் வைத்திலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.