மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கா?? சுகாதாரத்துறை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்..
தமிழ்நாட்டில் யாருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை அழிந்தபாடில்லை. கொரோனாவை எதிர்க்கு அனைத்து நாடுகளும் இன்றுவரை போராடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து இன்னும் நீங்கவில்லை.
கொரோனா 2 வது அலையால் பெரிய இழப்புகளை சந்தித்த இந்தியா, கொரோனா 3 வது அலையில் இருந்து தப்பிக்க கடும் முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இந்நிலையில்தான் ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
இதுவரை வந்த கொரோனா வைரசுகளை விட, இந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் கடும் வீரியம் கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை யாருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளதே தவிர, ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. ஒமைக்ரான் தொற்று என்பது பதற்றமடையக்கூடிய உருமாற்றம் அல்ல எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.