சினிமாவை மிஞ்சிய சம்பவம்.! சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல்.! ஒருவர் உயிரிழப்பு.!



one-accused-died-in-palayangottai-jaill

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்பட சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக விசாரணை கைதிகள் பல்வேறு கிளைச் சிறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் சிங்கிகுளம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முத்து மனோ (27), சந்திரசேகர்(22) கண்ணன்(23) மாதவன்(19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் தனிமைப்படுத்தியிருந்தனர்.

jaillஇதனையடுத்து அவர்களை அங்கிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அப்போது சிறையிலிருந்து ஒரு பிரிவைச் சார்ந்த கைதிகள் அந்த நான்கு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் முத்துமனோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.