மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாகர்கோயில் காசி வழக்கில் மேலும் ஒரு திருப்பம்..! இன்று ஒரு பெண் புகார்..! போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.!
நாகர்கோயில் காசி மீது மேலும் ஒரு இளம் பெண் இன்று புகார் வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து நாகர்கோயிலை சேர்ந்த காசி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளம் பெண் மருத்துவர் உட்பட சுமார் 70 கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பணம் பறித்து ஏமாற்றிவந்துள்ளான் காசி.
காசியின் வலையில் சிக்கிய பெண் மருத்துவர் இதுகுறித்து புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் காசியை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் காசியால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு இளம் பெண் காசி மீது மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்து காசி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று புகார் கொடுத்த பெண்ணை சேர்த்து இதுவரை 5 பேர் காசியால் ஏமாற்றப்பட்டதாக அவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.