மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெத்தாக வெளியே வரும் ஓ.பி.எஸ்.! இனி நடக்கவிருக்கும் ஆட்டம்.!
சமீபத்தில் லேசான காய்ச்சல் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக அவதி அடைந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ. பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஓபிஎஸ் கவச உடை அணிந்து வாக்களித்தார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ள, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இல்லம் திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஓ.பி.எஸ் அவர்கள் மீண்டும் மறுபடியும் தனது அரசியல் ஆட்டத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.