பொடுகு பிரச்சினையால் விபரீதம்: ப்ளஸ்-டூ மாணவியின் முடிவால் கலங்கிய பெற்றோர்..!



Parents distraught over result of plus-two student affected by dandruff problem

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் உள்ள அரசன்நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ரீனா  (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக அவரது பெற்றோர் அவருக்கு பாப் கட்டிங் வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஸ்ரீனா நேற்று முன்தினம் அவரது வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ,கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனயில் ஸ்ரீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெங்கமேடு காவல் நிலைய துணை ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான காவல்தூறையினர் மருத்துவமனைக்கு வந்து, ஸ்ரீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.