மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொதுமக்களே உஷார்.. புரோட்டா சாப்பிட்ட லாரி ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்.!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சித்தார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். லாரி ஓட்டுனரான இவர் கடந்த நவம்பர் 15ஆம் தேதி சதுரகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்து ராமகிருஷ்ணனும் அதே ஊரில் வசித்து வரும் வீரமுத்து என்பவரும் லாரியில் பொருட்களை ஏற்றுக் கொண்டு நிலக்கோட்டை அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வந்தனர். அன்று இரவு அங்குள்ள ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்டு விட்டு 2 பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த அடுத்த சில மணி நேரத்தில் ராமகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து ராமகிருஷ்ணனின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணன் புரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.