மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்! தமிழக அரசு அதிரடி!
வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் பயணிகள் வந்தால் கொரோனாவை கண்டறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். மேலும், வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிசிஆர் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு பயணியும் சோதனைக்கு பின்னரே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ-பாஸ் கண்டிப்பாக விண்ணப்பித்திருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.