கடலூர் மாவட்ட மதுக்கடைகள் மூடல் எதிரொலி; அண்டை மாவட்ட டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்.!



perambalur-agaram-sikoor-border-tasmac


கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி அணுமின் நிலைய சுரங்க விரிவாக்க நிலம் எடுக்கும் நடவடிக்கை மற்றும் விளைநிலங்களில் உள்ள நெற்பயிர்களை சேதப்படுத்தி கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று நெய்வேலியில் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. 

இந்நிலையில், அம்மாவட்டம் முழுவதும் நேற்று பாதுகாப்பு கருதி 3000 காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் அம்மாவட்ட குடிமகன்களின் மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் நபர்கள் அண்டை மாவட்டத்திற்கு சென்று மதுபானம் வாங்க தொடங்கினர். 

அதன்படி, திட்டக்குடியில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள அகரம்சிகூர் பார்டர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையில், வழக்கத்தை விட அதிகமாக குடிமகன்கள் வந்து மதுபானம் வாங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் மாலை நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.