சர்ச்சை கார்டூனுக்கு எதிர்ப்பு: செருப்பு வீசும் போராட்டம் அறிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம்.!



periyaar activist condemn recent viral udhayanidhi cartoon pic

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக தற்போது மத்திய - மாநில அரசுகளிடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. 

அமைச்சர் உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான கண்டனத்தை தெரிவித்து, தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார். 

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி, நிர்மலா சீதாராமனிடம் கையேந்துவது போல சித்தரித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் ஒன்றை தனியார் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியார் திராவிட கழகம், அதனை வெளியிட்ட தனியார் பத்திரிகை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.