தீபாவளி கொண்டாட்டம்; பட்டாசு வெடிக்க 2 மணி நேரமே அனுமதி.! அதுவும் எப்போ தெரியுமா?? தமிழக அரசு அறிவிப்பு!!



permissionn given for burst crackers in deepavali

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவரது நினைவில் முதலில் வருவது புத்தாடை மற்றும் பட்டாசுதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். 

ஆனால் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் தீ விபத்து நடக்கும் அபாயமும் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

   Crackersஅதன் அடிப்படையில் தீபாவளியன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி  வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இவ்வாறு இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.