மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேலியே பயிரை மேய்ந்த கதை... வாய் பேச முடியாத பெண்ணை நாசம் செய்து... ஊர் காவல்படை வீரர் செய்த இழிச்செயல்.!
தர்மபுரி அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்தகிரியூர் என்ற பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியின் மனைவி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வீட்டிலிருக்கும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த ஊர்க்காவல் படை வீரரான சென்ராயன்(37) வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இந்தப் பெண்ணை அருகிலிருக்கும் புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்த இந்த பெண் தனது கணவர் மற்றும் தாயிடம் நடந்த கொடுமைகளை பற்றி சைகை மூலம் விவரித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் தாயார் இருவரும் சென்ராயன் வீட்டிற்கு சென்று அவரைக் கண்டித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சென்ராயன் மற்றும் அவரது பெரியப்பா மகன் சென்னப்பன் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் தாயாரை கட்டையால் பலமாக தாக்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்ராயன் மற்றும் அவரது பெரியப்பா மகனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த கடத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் சென்ராயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காயமடைந்த அந்த பெண்ணின் தாயாருக்கு தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.