மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு செல்ஃபோனுக்கு இவ்வளவு அக்கப்போரா!?.. +2 மாணவி செய்த காரியத்தால் பதறிய கிராமம்..!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள குதிரைசாரி குளம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லையப்பன். இவரது மகள் முத்து பிரியா (17). இவர் திருமங்கலம் பகுதியில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில், முத்துபிரியா படிப்பில் கவனம் இல்லாமால் எந்நேரமும் செல்ஃபோனே கதியாக கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவரை படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்த அவரது பெற்றோர், அவரிடம் இருந்த செல்ஃபோனையும் பிடுங்கியுள்ளனர். இதனால் வேதனையடைந்த முத்துபிரியா, பெற்றோரிடம் செல்போனை திருப்பித்தருமாறு நச்சரித்துள்ளார். அவர்கள் கொடுக்காததால் மனமுடைந்த முத்துபிரியா, நேற்று முன்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருமங்கலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து முத்துபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.