மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
களைகட்டும் பொங்கல் பண்டிகை.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர்.. என பதிவிட்டுள்ளார் தெரியுமா.?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமில்லாமல் நாடு கடந்தது வாழும் தமிழ் மக்களால் ஆண்டுதோறும் தை மாதம் ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை விமர்சியாக கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் திருநாளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
தை 1 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. தமிழகர்களின் இந்த பாரம்பரிய பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான தலைவர்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துக்களை தமிழில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.
— Narendra Modi (@narendramodi) January 14, 2021