மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசாதம் கொடுத்து குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை... 70 வயது பூசாரி போக்சோவில் கைது.!!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
70 வயது பூசாரி
தேனி மாவட்டத்தில் உள்ள வடகரையில் பகவதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் 70 வயதான திலகர் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் கோவிலில் பூஜைகள் செய்வது மற்றும் கோவிலை பராமரிப்பது ஆகிய பணிகளை பார்த்து வருகிறார். மேலும் சாமிக்கு படைக்கப்படும் பிரசாதங்களையும் அப்பகுதியில் விளையாண்டு கொண்டிருக்கும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கொடுப்பது வழக்கம்.
இனிப்புகள் கொடுத்து குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில் பூசாரி திலகர் குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுத்து அவர்களை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு இனிப்புகள் கொடுத்த பூசாரி திலகர் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: விபரீதத்தில் முடிந்த சமூக வலைதள நட்பு.!! 23 வயது பெண் பாலியல் பலாத்காரம்.!! 68 வயது முதியவர் கைது.!!
கைது செய்யப்பட்ட பூசாரி
இது தொடர்பாக குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பூசாரி திலகரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பி 4 லட்ச ரூபாய் பறிப்பு.!! பயிற்சியாளர்கள் மீது பரபரப்பு புகார்.!!