மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதெல்லாம் இத்தோடு நிறுத்திக்கோங்க.. ஆபாச பேட்டி எடுத்து வெளியிட்டால் கடும் நடவடிக்கை.. காவல் துறை எச்சரிக்கை..
யூடியூப் சேனல்களில் ஆபாச பேட்டிகளை எடுத்து ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படும் பிரச்னைகளில் ஒன்று Chennai Talk யூடியூப் சேனல் பிரச்சனை. இளம் பெண் ஒருவரிடம் ஆசாபமாக பேசி, பேட்டி எடுத்து அதனை Chennai Talk என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய சென்னை டாக் யூடியூப் சேனலை சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் ஆபாசமாக பேசி, அதுபோன்று பேட்டி எடுத்து ஒளிபரப்பிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்டவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபோன்று பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து அதனை யூடியூப் சேனலில் ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.