மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தூக்கில் தொங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்! அதிர்ச்சி காரணம்!
நெய்வேலி காவல் நிலையத்தில் காவல் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஜெய்கிந்த் தேவி என்பவர் மக்களவை தேர்தல் பணிக்காக திருச்சி சென்றுள்ளார். தேர்தல் பனி முடிந்து திரும்பிய அவர், திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இன்ஸ்பெக்டர் ஜெய்கிந்த் தேவி இறந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜெய்கிந்த் தேவி திருமணத்திற்கு முன்பாக தனியார் கிளினிக்கில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு பணிபுரிந்த மாணிக்கவேலு என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினருக்கு 2 பெண்குழந்தைகளும் இருந்துள்ளது.
மாணிக்கவேலின் மனைவி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றதிலிருந்தே அவருடைய கணவருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு தேவியை கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இதன்காரணமாகவே மனவேதையில் ஜெய்கிந்த் தேவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.