மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யூடியூப் பார்த்து தானியங்கி கேமிரா தயாரிப்பு.. பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது.. இலங்கை அகதிகள் முகாமில் பகீர்.!
யூடியூப் பார்த்து தானியங்கி கேமராவை தயாரித்த வாலிபர் ஒருவர், அதனை குளியலறையில் பொருத்தி பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்றபோது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகாமையில் இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்புகள் உள்ளது.
இந்த நிலையில், அங்கு வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டின் வெளியே இருந்த குளியலறையில் குளிக்க சென்ற போது, அறையின் மேற்பகுதியில் கருப்பு நிறத்தில் ஏதோ உள்ளது போல அவருக்கு தெரிந்துள்ளது.
இதனால் அதன் அருகில் சென்று பார்க்கும் போது சிறிய அளவிலான கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தபோது, அதே குடியிருப்பில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் தான் கேமராவை பொருத்தியது தெரியவந்தது.
மேலும், அவர் யூடியூபை பார்த்து தானாகவே தானியங்கி வெப்கேமரா தயாரித்ததாகவும், பவர் பேங்க் மூலமாக கேமராவை இயங்க செய்து மெமரி கார்டில் காட்சிகள் பதிவாகும் வகையில் உருவாக்கியதாவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து விஜயகுமார் உண்மையை ஒப்புக் கொண்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.