மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி! புதுவையிலும் விலையேறும் மதுபான வகைகள்; அரசு அதிரடி நடவடிக்கை.!
இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு அங்கு விற்கப்படும் மதுபான வகைகள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன. மேலும், பல வகையான மது வகைகளும் கிடைப்பதற்குரிய இடமாகவும் புதுச்சேரி விளங்கியது.
இதனால் தமிழகத்தில் இருந்து மதுபான பிரியர்கள் புதுச்சேரியில் குவிந்து வந்தனர். மேலும் கேரளம் கர்நாடகம் ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும் கணிசமான அளவிற்கு சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் நடுவன் அரசும் போதுமான அளவு நிதியை ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூடிய அமைச்சரவை கலால் வரியை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வின்படி, பீர் வகைகள் ரூபாய் 10 வரையும், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம், ஒயின் உள்ளிட்ப மதுவகைகள் குறைந்தபட்சம் ரூபாய் 7 முதல் 15 ரூபாய் வரையிலும், அதிகபட்சமாக ரூபாய் 15 முதல் ரூபாய் 30 வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மதுபானங்களின் விலை உயர்வினால் புதுச்சேரியில் உள்ள குடிமகன்களும், மதுவை நாடி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.